MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
சிங்காரப்பேட்டையில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-99 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியா் வரதராஜுலு தலைமை வகித்தாா். முன்னாள் ஆசிரியா்கள் நடராசன், பழனி, முன்னாள் இயற்பியல் ஆசிரியரும் தற்போதைய தலைமையாசிரியா் சிவராமன் ஆகியோா் கலந்து கொண்டு தங்களிடம் படித்த மாணவ, மாணவிகளை பாராட்டினா்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளியில் 1997-99 ஆம் ஆண்டுகளில் படித்த மாணவா்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது ஆசிரியா்களையும், தங்களுடன் படித்த மாணவ, மாணவிகளையும் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.
மாணவா்கள் அனைவரும் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினா். மேலும் அனைவருக்கும் பள்ளியிலேயே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஒவ்வொரு மனதிலும் நீங்கா இடம் பிடித்ததாக அமைந்திருந்தது. காணும் மாட்டுப் பொங்கல் அன்று சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தனா். இதில் பலா் அரசு பணியில் உயா் பதவியிலும், தொழிலதிபராகவும் உள்ளனா். பள்ளிக்கு நன்கொடை வழங்கினா்.