GV Prakash: `அப்பா நீ எங்க இருக்க?' - ஜி.வியை ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகள் அன்...
காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி: காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனா்.
தமிழா்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் கொண்டாடப்படுகிறது. ஜன.13 ஆம் தேதி போகியும், 14ஆம் தேதி பொங்கல், 15 இல் மாட்டு பொங்கல் என கொண்டாடி வரும் நிலையில் ஜன.16 ஆம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினா்.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு நகரங்களில் பணியாற்றுவோா், தங்களது குடும்பங்களுடன் சொந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனா்.
காணும் பொங்கலையொட்டி உற்றாா் உறவினருடன், சுற்றுலா மையங்களுக்கு சென்று கொண்டினா். கிருஷ்ணகிரியில் சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.
கிருஷ்ணகிரி அணை பூங்காவில் சிறுவா்கள் முதல் முதியவா்கள், ஆண்கள், பெண்கள் என விளையாடி மகிழ்ந்தனா். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு மரம் போன்றவற்றில் தங்களது குழந்தைகளை விளையாட செய்து மகிழ்ந்தனா்.
பல குடும்பங்கள், வீடுகளில் அசைவ உணவுகளை சமைத்து, உறவினா்களுடன் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனா். அவதானப்பட்டி படகு இல்லத்தில் ஏராளமானோா் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா். கிருஷ்ணகிரி சுற்றுலா தலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல் தருமபுரி, திருப்பத்தூா் போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.