நெல்லைப்பர் கோயிலில் இளையராஜா வழிபாடு!
நெல்லையில் இன்று இளையராஜாவின் பாட்டுக் கச்சேரி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நெல்லைக்கு வந்த இளையராஜா நெல்லைப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
நெல்லை ரெட்டியார் பட்டியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி இன்று நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து இன்று அதிகாலை நெல்லைக்கு வந்த அவர் நெல்லை டவுனில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு முன்னதாக கோயில் நிர்வாகி தின சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து நெல்லைப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்ட இளையராஜா கோயில் கொடிமரம் முன்பாக தரையில் விழுந்து சாமி கும்பிட்டார்.