குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
விஜய் ஆண்டனியின் ககன மார்கன் - முதல் பாடல் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.
அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
பிரிகிடா கதாநாயகியாகவும், விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ககன மார்கன் படத்தின் முதல் பாடலான ‘சொல்லிடும்மா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி இசையில் அவரே பாடி வெளியாகியுள்ள இந்தப் பாடலை லாவர்தன் எழுதியுள்ளார்.
ககன மார்கன் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.