செய்திகள் :

தாமதமாக வெளியாகும் சூரியின் மாமன் பட முதல் பார்வை போஸ்டர்!

post image

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜன.17) மாலை வெளியாகிறது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா - 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல்பார்வை போஸ்டர் நேற்று (ஜன.16) வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வெளியாகவில்லை.

இந்த நிலையில் இன்று (ஜன.17) மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

வரலாற்று சாதனை..! 2034 வரை விளையாட ஒப்பந்தமான கால்பந்து வீரர்!

பிரபல கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.33... மேலும் பார்க்க

மாமன் பட முதல் பார்வை போஸ்டர்..! வெளியீட்டு மாதமும் அறிவிப்பு!

சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியரா... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் ககன மார்கன் - முதல் பாடல் வெளியீடு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்... மேலும் பார்க்க

ஆசீர்வாத் சினிமாஸின் வெள்ளி விழா..! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் படங்களை தயாரித்து வழங்கும் ஆசீர்வாத் சினிமாஸ் இன்னும் சில தினங்களில் வெள்ளி விழாவை கொண்டாடவிருக்கிறது. இதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது... மேலும் பார்க்க

கங்காரு உருவத்தை பச்சை குத்த திட்டமிட்டிருக்கும் கார்லோஸ் அல்கராஸ்!

பிரபல டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் கங்காருவை தனது உடலில் பச்சை குத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கொண்டாடும் விதமாக நடப்பு ஆஸ். ஓபன் தொடரை வென்றால் தனது உடலில் கங்காரு படத்தை பச... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் எமர்ஜென்சி ரிலீஸ் சிக்கல்..! கங்கனா ரணாவத் வேதனை!

எஸ்ஜிபிசி (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு) கங்கனாவின் எமர்ஜென்சி படத்தை பஞ்சாப்பில் திரையிட வேண்டாமென கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு நடிகை கங்கனா இது முற்றிலும் கலை, கலைஞர்களை துன்புறுத்தும் செயல் என... மேலும் பார்க்க