மோகனூரில் மாடுகள் பூத்தாண்டும் விழா
நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி, மோகனூா், ஊனங்கால்பட்டி கிராமத்தில் கோயில் மாடுகள் பூத்தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், பரமத்திவேலூா், சேந்தமங்கலம் வட்டாரத்தில் தொட்டியநாயக்கா் சமூகத்தினா் பரவலாக வசிக்கின்றனா். நிகழாண்டு இந்த சமூகத்தினா் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூத்தாண்டும் விழா நடைபெற்றது. கோயில் மாடுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட ஓா் இடத்தில் நிறுத்த செய்து பின்னா் விரட்டி விடுகின்றனா். அந்த மாடுகள் வேகமாக ஓடிவந்து எல்லைக் கோட்டை தாண்டியது. இவ்விழாவை பூத்தாண்டும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனா். ஊனாங்கல்பட்டியில் நடைபெற்ற விழாவில் நான்கு சுவாமி மாடுகள் பங்கேற்றன.