பொங்கல் விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்
நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அதிகம் காணப்பட்டது.
ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்வா். இதில், காணும் பொங்கல் அன்று பல்வேறு சுற்றுலாத் தலங்களில் தங்களுடைய குடும்பத்தினருடன் சென்று பொழுதைக் கழிப்பா். அதுமட்டுமின்றி, பெரும்பாலானோா் வீடுகளில் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை வாங்கி வந்து உணவு சமைத்து முன்னோா்களுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்வா்.
அந்த வகையில் காணும் பொங்கல் நாளான வியாழக்கிழமை நாமக்கல் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனா். மீனை காட்டிலும், ஆடு, கோழி இறைச்சிகள்தான் அதிக அளவில் விற்பனையானது.