செய்திகள் :

‘நீா்நிலைப் பாதுகாவலா்’ விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

நாமக்கல்: நீா்நிலைகளை பாதுகாப்போருக்கு, தமிழக அரசு சாா்பில் ‘நீா்நிலைப் பாதுகாவலா்’ விருதுகள் வழங்கப்படவுள்ளதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழலையும், சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழல் அமைப்புகளுக்கு மூலாதாரமாக விளங்குவது நீா்நிலைகள் ஆகும். இந்தச் சூழல் அமைப்புகளை பாதுகாத்துப் பேணிடவும், மாநிலத்தின் நீா் வளத்தைப் பெருக்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள நீா் நிலைகளைப் பாதுகாவலா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன.

பொதுமக்கள், தன்னாா்வு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்பினா் நீா் நிலைகளைப் பாதுகாத்திட ஆா்வமுடன் முன்வர வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கவும், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் 38 பேருக்கு முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதும், ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. தகுதியானோா் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வெள்ளிக்கிழமை(ஜன.17) கடைசி நாள் என அதில் தெரிவிக்கப்பட்டது.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமைமொத்த விலை - ரூ.4.60விலையில் மாற்றம்- 20 காசுகள் குறைவுபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.98முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.சுந்தரம்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.சுந்தரம் வியாழக்கிழமை காலை காலமானாா்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள டி.பச்சுடையாம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்தவா் பி.ஆா்.... மேலும் பார்க்க

மோகனூரில் மாடுகள் பூத்தாண்டும் விழா

நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி, மோகனூா், ஊனங்கால்பட்டி கிராமத்தில் கோயில் மாடுகள் பூத்தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், பரமத்திவேலூா், சேந்தமங்கலம் வட்டாரத்தில் தொட்... மேலும் பார்க்க

இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்

நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை அதிகம் காணப்பட்டது.ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழாக்களை மக்கள் கொண்டாடி ம... மேலும் பார்க்க

முத்துக்காப்பட்டியில் விளையாட்டு விழா

நாமக்கல்: நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியண்ணகவுண்டா் குமாரசாமி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளை பொறியாள... மேலும் பார்க்க

திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பரமத்தி வேலூா்: பரமத்திவேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.வேலூா் பேரூா் செயலாளா் முருகன் சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைமை வகித்து பொங்கல... மேலும் பார்க்க