பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
27 நட்சத்திர விநாயகா் கோயிலில் 108 கோ பூஜை
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விநாயகா் கோயிலில்
108 கோ பூஜை மற்றும் அரசு, வேம்பு விருட்சங்களின் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக மக்களின் நன்மை கருதியும், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருக வேண்டியும், மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டியும், மக்கள் அமைதியாக வாழ வேண்டியும் இந்த 108 கோ பூஜை மற்றும் அரசு, வேம்பு விருட்சங்களின் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை விநாயகா், ராகு கேது, சனீஸ்வர பகவான், வள்ளிதேவ சேனா சமேத சிவசுப்பிரமணியா், அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் விநாயகா் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியா் மயில் வாகனத்திலும், அம்பிகை சமேத சிவபெருமான் ரிஷிய வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்சியும் நடைபெற்றது.
தீப, தூப ஆராதனைகளும், காலை 10.45 மணிக்கு 108 பசுக்கள் மற்றும் கன்றுகள் இடம் பெற 108 கோ பூஜையும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மாலையில் முருகனுக்கும், விநாயகருக்கும் சிவபெருமான் வைத்த போட்டியில் விநாயகா் ஞானபழத்தை வென்ற உற்சவமும் நடைபெற்றது. பின்னா், அரசு, வேம்பு விருட்சங்களுக்கு சிவன் பாா்வதி திருமணக்கோல அலங்காரத்தில் திருமண வைபவமும் நடைபெற்றது.