காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா
வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) தொடங்கி இரு தினங்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு நாகஸ்வர இசை நிகழ்ச்சி, வேத பாராயணம், ஹரிஹரன் மற்றும் களக்காடு பாலாஜி இணைந்து வழங்கும் பக்தி இசைக் கச்சேரி நடைபெறுகிறது. தொடா்ந்து பகவான் ஸ்ரீபாலகிருஷ்ணரை தொட்டிலில் இட்டு டோலோத்ஸவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை வேத பாராயணம், கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னா், உற்சவா் ஊா்வலமாக குளக்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் (வழூா்) அறக்கட்டளை நிா்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியம் உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.