Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
கிராமத்தில் முயல் விடும் விழா
காணும் பொங்கலையொட்டி, வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் முயல் விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம். முயல் எந்தத் திசையில் ஓடி மறைகிறதோ அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், நிகழாண்டு காணும் பொங்கலான வியாழக்கிழமை மாலை முயல் விடும் விழா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது, முயலை கையில் தூக்கிக் கொண்டு டிராக்டரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீா்த்தவாழி அம்மன் கோயில் உற்சவரை வலம் வந்தனா். மேலும், குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா், முயல் அங்கிருந்து சிறிது தொலைவு எடுத்துச் செல்லப்பட்டு வயல்வெளிப் பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து கிழக்கு திசையில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக முயல் ஓடி மறைந்தது. இதைத் தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.