செய்திகள் :

`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா

post image

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்படுவர் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா. இருப்பினும், கடைசியாகக் கடந்த 2022-ல் ஜூலையில் இலங்கைக்கெதிராக ஒரு போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. கடைசியாக, கடந்த அக்டோபரில் தான் விளையாடிய நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 33, 11, 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

ஷபாலி வர்மா

இருப்பினும், அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இரண்டு உள்நாட்டு தொடர்களில் 12 போட்டிகளில் அதிரடியாக 527, 414 ரன்கள் வீதம் அடித்து மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிக்க ஆயத்தமாக்கிவருகிறார். இந்த நிலையில், தேசிய அணியிலிருந்து தன்னை நீக்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஷபாலி வர்மா கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ஷபாலி வர்மா, ``அதைக் கடந்து வருவது எளிதானதல்ல (அணியிலிருந்து நீக்கப்பட்டது). அணியிலிருந்து என்னை நீக்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான், எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த விஷயத்தைத் தெரியப்படுத்தவில்லை. அவர் குணமடையும் வரை அந்தச் செய்தியை அவரிடமிருந்து மறைத்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவரிடம் சொன்னேன். அப்பாவுக்கு எல்லாமே தெரியும்.

ஷபாலி வர்மா

சில சமயங்களில் குழந்தைகளாக நம் பலத்தை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் அவர்கள் மறப்பதில்லை. என்னுடைய சிறுவயது உடற்பயிற்சிகளை எனது தந்தை நினைவூட்டினார். அதுதான் எனது பலம். சில சமயங்களில், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள, அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய பலம் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிறப்பான இன்னிங்ஸை கட்டமைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், மனதளவில் ஸ்மார்ட் ஆவதே நிலையான இலக்கு." என்று கூறினார்.

Pratika Rawal

ஷபாலி வர்மாவுக்குப் பதில் இந்திய அணியில் எடுக்கப்பட்ட, பிரதிகா ராவல் ஆறு போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரை சதங்கள் அடித்து 444 ரன்கள் அடித்து, முதல் ஆறு போட்டிகளில் அதிக ரன்கள் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

BCCI: தொடர் தோல்வி எதிரொலி; குடும்பத்தினருடன் தங்குவதில் கட்டுப்பாடா? புதிய விதிகள் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சில விதிகளைக் கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.புதிய விதிகளின்படி, அணி வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுப் போட்டிக... மேலும் பார்க்க

``அந்த ஆஸி வீரர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்..!" - BGT தோல்வி குறித்து அஷ்வின்

ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வென்று, இந்தியாவிடமிருந்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில், கடைசி டெஸ்ட் போட்டியை வென்றால் கோப்பையைத் தக்க... மேலும் பார்க்க

Ira Jadhav: அன்று ஏலத்தில் பெயரில்லை; இன்று 157 பந்துகளில் 346* ரன்கள்; பதில்சொன்ன 14 வயது இரா ஜாதவ்

இந்திய உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிசிசிஐ-யால் வரையறுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில், 14 வயது மும்பை வீராங்கனை இரா ஜாதவ் முச்சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார்.பெங்க... மேலும் பார்க்க

Shreyas Iyer: ``சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வானால் அதுவே எனக்கு..." - நெகிழும் ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய கிரிக்கெட் வீரர்களில் 2024-ம் ஆண்டு யாருக்கு சிறப்பாக முடிந்ததோ இல்லையோ ஷ்ரேயஸ் ஐயருக்கு சிறப்பாக அமைந்தது. ஐ.பி.எல் கோப்பை, ரஞ்சி டிராபி, சையது முஷ்டாக் அலி டிராபி ஆகிய மூன்று கோப்பைகளை கேப்டன... மேலும் பார்க்க

``டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை" - BCCI புதிய செயலாளர் ஓப்பன் டாக்

இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று மோசமான தோல்வியைச் சந்தித்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் ... மேலும் பார்க்க

Guptill: இந்தியாவும் உங்களை மறக்காது... 2019-ல் இந்தியர்களின் கனவை உடைத்த கிவி நாயகன் விடைபெற்றார்!

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் 2003, 2007, 2015, 2019, 2023 உலகக் கோப்பைத் தொடர்கள் இந்திய அணிக்கு மறக்க முடியாத சோகங்களை ஏற்படுத்தின. இவற்றில், எதிரணி மொத்தமாக இந்திய அணியின் கனவை நொறுக்கியத... மேலும் பார்க்க