``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட்...
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகளவில் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், பாலத்தில் அனுமதியின்றி எவரும் செல்லத் தடை விதிக்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தப் பாலத்தில் 24 மணி நேரமும் போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.
ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.