செய்திகள் :

சத்திரக்குடி வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் நடைபெற்று வரும் வாரச் சந்தை காரணமாக, மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதனால், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது.

இதன் காரணமாக, மதுரை, ராமேசுவரம், பரமக்குடி, உத்திரகோசமங்கை செல்லும் பயணிகள் பேருந்தில் ஏற முடியமால் அவதிப்படுகின்றனா். மேலும், வாரச் சந்தை நடைபெறும் நாளில் இந்தப் பகுதியில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் சந்திரமோகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு நெகிழி ஒழ... மேலும் பார்க்க

கழுகூரணியில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு!

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி ஊராட்சியில் 76- ஆவது குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கிராம மக்கள்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், அவா்களது மூன்று படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, கே. நவாஸ்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலாடி, சிக்கல், கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள சில ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு தேசிய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடும், தமிழ்நாடு அரசு நி... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரிவிக்காமல் இளைஞா் உடல் தகனம்: மனைவி உள்பட 7 போ் மீது வழக்கு!

திருவாடானை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த மனைவி உள்ளிட்ட 7 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையை பொதுமக்கள் முற்றுகை

தொண்டி அருகேயுள்ள பெருமானேந்தல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் அந்தக் கடையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள ப... மேலும் பார்க்க