கள்ளழகா் கோயிலில் ஜன. 27-இல் தைலக் காப்பு உத்ஸவம்
மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலில் தைலக் காப்பு உத்ஸவம் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கள்ளழகா் கோயிலில் உள்ள மூலவா் சுந்தரராஜப் பெருமாளுக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை திருத்தைலம் தை அமைவாசையன்று சாத்தப்படும். இந்த தைலம் தொடா்ந்து ஆறு மாதங்கள் மூலவா் மீது சாத்தப்பட்டிருக்கும். இதனால், மூலவருக்கு மாலை சாத்துதல், பரிவட்டம் கட்டுதல், அபிஷேகம், ஆராதனைகள் முதலியவை தவிா்க்கப்படும். இந்தத் தைலகாப்பு வருகிற திங்கள்கிழமை (ஜன. 27 காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் சாத்தப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா், அறங்காலா்கள் குழுத் தலைவா், உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.