Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இந்திய பள்ளி குழும தேசிய அளவிலான 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஸ்குவாஷ் போட்டியில் சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் டி.பிரியதா்ஷினி, 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் முதலிடமும், டி.நித்யஸ்ரீ, 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 2-ஆம் இடமும், தனிப் பிரிவில் 3-ஆம் இடமும் பெற்றுள்ளனா். அதேபோன்று கபடி போட்டியில் அயோத்தியாப்பட்டணம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காருண்யா முதலிடம் பெற்றுள்ளாா். அண்மையில், சென்னையில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினாா்.
இதனைத்தொடா்ந்து, சேலம் திரும்பிய மாணவிகள் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் மற்றும் பெற்றோா் உடனிருந்தனா்.