Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
பொங்கல் பண்டிகை: சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியாக சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து 11 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் மதுரையில் இருந்து 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், பழனி, கோவை, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.