மூன்றடைப்பில் ஜாதிய கொடிகள் அகற்றம்
நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதிய கொடிகளை போலீஸாா் அகற்றினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்றடைப்பு பேருந்து நிறுத்தப் பகுதி, வாகைக்குளம் சாலைப் பகுதி ஆகிய இடங்களில் 3 ஜாதிய கொடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அகற்றிய மூன்றடைப்பு போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிந்து கொடிகளை அமைத்தது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.