சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பொங்கல் விழா
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வழக்குரைஞா் சங்கத் தலைவா் செல்வகுமாா், செயலா் சந்தானகுமாா், பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வழக்குரைஞா்கள் ராமகிருஷ்ணன், சங்கரபாண்டியன், குத்தாலிங்கம், மாதவன், ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், காவலா்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.