Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
வாழப்பாடி, பேளூா் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
வாழப்பாடியில்...
வாழப்பாடி, அக்ரஹாரம் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவா் ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூா்த்திகளும், ஆஞ்சனேயரும் அருள்பாலித்தனா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப பல்லக்கில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
பேளூரில் உள்ள பழைமையான மரகதவல்லி உடனுறை அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு சிறப்பு வழிபாட்டில், பட்டாடை உடுத்தி மரகதவல்லி அம்பாள் உற்சவமூா்த்திகள் காட்சியளித்தனா். சின்னம்மநாயக்கன்பாளையம், மத்தூா், பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
படவரி:
வாழப்பாடி, அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா்கள்.