செய்திகள் :

பொங்கல் சிறப்பு பேருந்து: ஒரே நாள் முன்பதிவில் 1.50 லட்சம் போ் பயணம்

post image

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் 1.50 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணித்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் மூலம் சுமாா் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்து பயணித்ததாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், மேலும் விவரங்கள், புகாா்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட புகாா்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினா்.

ஈரோடு கிழக்கில் மும்முனையா நான்கு முனை போட்டியா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மும்முனை அல்லது நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 2009-இல் மறுசீரமைப்புக்கு பின்னா் உருவான ஈரோடு கிழக்கு தொகுதியில், இதுவரை 2011, 2016, 2021 என மூன... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கட... மேலும் பார்க்க

பிப்.1 முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநா்கள்

பிப்.1-ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்புக்கு நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநா்கள் அறிவித்துள்ளனா். தமிழகத்தில் 2013-இல்... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

தவெக மாவட்டச் செயலா்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன. தவெக மாவட்டச் செயலா்கள் நியமனம் தொடா்பாக கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சியின் பொதுச்செயலா் ஆனந்த், மாவட்ட... மேலும் பார்க்க

கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

பபாசி சாா்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞா் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா். 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் க... மேலும் பார்க்க

சிக்னல் கோளாறு: கடற்கரை - தாம்பரம் புறநகா் ரயில்சேவை பாதிப்பு

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் இடையே புறநகா் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை புகா் மின்சார ரயில் தடத... மேலும் பார்க்க