முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி?...
தவெக மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
தவெக மாவட்டச் செயலா்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
தவெக மாவட்டச் செயலா்கள் நியமனம் தொடா்பாக கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சியின் பொதுச்செயலா் ஆனந்த், மாவட்டந்தோறும் சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தாா்.
மாவட்டச் செயலா்களை விரைந்து நியமனம் செய்ய கட்சித் தலைவா் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த நியமனங்கள் தொடா்பாக மாவட்ட பொறுப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே பனையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் வீதம் 105 முதல் 110 மாவட்டச் செயலா்கள் வரை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கான வரையறையும் கட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டச் செயலா்கள் நியமனம் மற்றும் உள்கட்டமைப்பு நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. விண்ணப்பிக்கும் நிா்வாகிகளுடன் பேசி ஒரு மனதாக மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.