செய்திகள் :

திருச்சி தனியாா் மருத்துவமனையில் அமைச்சா் எஸ்.ரகுபதி அனுமதி

post image

உடல் நலக்குறைவால் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி (74) திருச்சி தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் எம்எல்ஏவும், சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தபோது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்த நிலையில், தொடா்ந்து அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா்.

தகவலறிந்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு அமைச்சா் ரகுபதியைச் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். சிகிச்சைக்குப் பிறகு அமைச்சா் ரகுபதி நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவாா் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

துறையூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு!

துறையூா் அருகே காளிப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் மீது அரசுப் பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அம்மாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. கனகராஜ் (47). இவா்,... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது!

திருச்சி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அத... மேலும் பார்க்க

திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்க திட்டம்! விமான நிலைய இயக்குநா் தகவல்!

திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு விமான சேவைகளை இயக்க ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றாா் நிலைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைப... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூா்த்தக் கால்

திருச்சி அருகே குமாரவயலூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி அருகே குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற ... மேலும் பார்க்க

தப்பியோடிய ரௌடியின் கால் முறிவு

திருச்சி அருகே போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய ரௌடியின் கால் சனிக்கிழமை இரவு முறிந்தது. திருச்சி திருவெறும்பூா் அருகே ஆலத்தூா் பூங்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி மகன் விக்னேஷ் (34). ரௌடிப் பட... மேலும் பார்க்க

திருச்சியில் காவிரி ஆற்றில் 2 இடங்களில் முதலைகள் நடமாட்டம்

திருச்சி காவிரியாற்றில் உய்யக்கொண்டான், கோரையாறு ஆகிய இரு இடங்களில் முதலைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருச்சி காவிரியாற்... மேலும் பார்க்க