விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
அஜித்துக்கு பத்ம பூஷண், அஸ்வினுக்கு பத்மஸ்ரீ: விருதுகள் அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டில் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் இருவருக்கு பத்ம ஸ்ரீ விருதும், மூவருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களில் பத்ம பூஷண் விருது தொழிற்துறையைச் சேர்ந்த ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி, கலைத் துறையில் நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை ஷோபனா சந்திரகுமாருக்கும் வழங்கப்படுகிறது. பத்ம ஸ்ரீ விருதுகளில் மதுரையைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்தி, பாராலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற ஹரியாணாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்குக்கும் வழங்கப்படுகிறது.