விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
2-வது டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள்; மே.இ.தீவுகள் முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று (ஜனவரி 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
163 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதன் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டனர்.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!
ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய குடகேஷ் மோட்டி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 87 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோமெல் வாரிக்கேன் 36 ரன்களும், கீமர் ரோச் 25 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சாஜித் கான் 2 விக்கெட்டுகளையும், காசிஃப் அலி மற்றும் அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
154 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சௌத் ஷகீல் 32 ரன்களும், கம்ரான் குலாம் மற்றும் சாஜித் கான் தலா 16 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர்!
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கேன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், கீமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.