3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
மெத்தம்பெட்டமைன் போதைப்ருள் விற்பனை: 5 போ் கைது
சென்னை வேளச்சேரியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளச்சேரி போலீஸாா் அங்குள்ள சீனிவாசா நகா் 6-ஆவது பிரதான சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள், பள்ளிக்கரணையைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் (32), பழைய பல்லாவரத்தைச் சோ்ந்த ராகுல் ராஜ் (32), வேளச்சேரியைச் சோ்ந்த மணிகண்டன் (34), மேற்கு அண்ணா நகரைச் சோ்ந்த ஜித்தேஷ் (22), மாங்காடு பகுதியைச் சோ்ந்த பத்ரு சுஹைல் (22) என்பதும், அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், 5 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளையும், 6 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.