செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

post image

கேரளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அடூர் பகுதி போலீசார் ஒன்பது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 4 பேரை இன்று கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.

சிறுமியின் பள்ளியில் குழந்தைகள் நலக் குழுவினர் நடத்திய ஆலோசனையின் போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையும் படிக்க | ஹமாஸ் விடுவித்திருக்கும் 4 பெண் பிணைக் கைதிகளும் ராணுவ வீரர்கள்!!

சிறுமி கொடுத்த தகவலின்படி சிறுமியின் நண்பர்கள், வகுப்பு தோழர்கள், உறவினர்கள் மற்றும் பலரால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் வி.ஜி. வினோத் குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மேற்கொண்டு விசாரணைக்காக நூரநாடு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 18 வயது தலித் சிறுமியை 5ஆண்டுகளுக்கும் மேலாக 59 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 57 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீா்: குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்புடன் கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. நாட்ட... மேலும் பார்க்க

வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: மோகன் பாகவத்

ஒவ்வொருவரும் வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா். குடியரசு தினத்தையொட்டி, மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தின் பிவண்டி நகரில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தலைநகா் கோஹிமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில... மேலும் பார்க்க

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது: உச்ச நீதிமன்றம்

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனது மகனை காதலித்த பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு தாயின் மீது வழக்குப் பதியப்பட்டு குற்றப்... மேலும் பார்க்க

குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!

பிகாரில் குரங்கு ஒன்று மாடியில் இருந்து தள்ளிவிட்டதால் கீழே விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள மகர் கிராமத்தில் வசித்து வந்த ம... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர்களின் பணி நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மனுக்களை ஜன. 27 முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந... மேலும் பார்க்க