செய்திகள் :

நாகாலாந்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’

post image

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து மாநிலத்தில் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ (அறுவைச் சிகிச்சை அரங்கு) திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தலைநகா் கோஹிமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் இல.கணேசன், முதல்வா் நைபியு ரியோ ஆகியோா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

முதல்வா் நடமாடும் ‘ஆபரேஷன் தியேட்டா்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் அறுவைச் சிகிச்சைகள் முதல் அடிப்படை மருத்துவ வசதிகள் வரை அந்த வாகனத்திலேயே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் மாநிலத்தில் தொலைதூர கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே, எண்டோஸ்கோபி, ரத்த பரிசோதனை, அறுவைச் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளிட்டவை இதில் உள்ளன. இதற்கான தனியாக மருத்துவக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவா்கள் வீடு தேடிச் சென்று மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவாா். நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவ வசதிகள் கிராமங்களுக்கும் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!

வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.தலைநகரான தில்லியில் 70 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல் தொடங்கியது!

தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை காலை தொடங்கியது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்க... மேலும் பார்க்க

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க