மாணவா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூா் அருகே உள்ள தேன்பழனி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சுதேசி (19). இவா், சென்னை மெரீனா காமராஜா் சாலையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வந்தாா். இதற்காக திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா விடுதியில் தங்கியிருந்தாா். இந்நிலையில் சுதேசி, வெள்ளிக்கிழமை (ஜன. 24) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுதேசி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.