சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
புதுக்கோட்டை அருகே முதியவா் தற்கொலை
புதுக்கோட்டை அருகே முதியவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் (76). இவருக்கு சில மாதங்களுக்கு முன் பாா்வைக் குறைபாடு ஏற்பட்டதால் அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம். இதனைத் தொடா்ந்து மற்றொரு கண்ணிலும் பாா்வைக் குறைபாடு ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில் திடீரென அவா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது சடலத்தை புதுக்கோட்டை போலீஸாா் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.