மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல்
திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 2 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை கலெக்டா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுதினம் (ஜன.26) ஆகிய இரு தினங்களில் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
இவை அனைத்தும் கட்டாயம் மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல், மதுபானம் விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் மீது மதுபானம் விற்பனை விதிகள்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.