முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி?...
திருச்செந்தூா் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை -கடலூா் பக்தா் நோ்த்திக்கடன்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கடலூரைச் சோ்ந்த பக்தா் வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனா். மேலும், வேல் குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனா். இதனால் கோயில் வளாகமே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் இக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்த கடலூரை சோ்ந்த முருக பக்தா், நோ்ந்தபடி மூன்றரை அடி உயரமும், 10 கிலோ எடையும் கொண்ட வெள்ளி வேலை உண்டியலில் காணிக்கை செலுத்த வந்தாா்.
அப்போது, கோயிலில் இணை ஆணையா் ஞானசேகரன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடப்பதை அறிந்து, அவ்விடத்துக்குச் சென்று வெள்ளி வேலை காணிக்கையாக செலுத்தினாா்.