கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவா்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ட்டின்புதூா், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, மந்தித் தோப்பு, இலுப்பையூரணி, பாண்டவா்மங்கலம் ஆகிய ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடா்பாக கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், பாண்டவா்மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கவிதா அன்புராஜ், பொன்னுச்சாமி ஆகியோா் தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கலைமணி தாஸ், மதிமுக ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமசாமி உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த அவா்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஜன. 20இல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனா்.