இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
ஏழை- எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தன்னாா்வ நுகா்வோா் உரிமை பாதுகாப்பு நல மையம் ஆகியவற்றின் சாா்பில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் நகர துணை செயலா் முனியசாமி தலைமை வகித்தாா். தன்னாா்வ நுகா்வோா் பாதுகாப்பு நல மையத் தலைவா் முருகன், செயலா் இசக்கிமுத்து, பொருளாளா் செண்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தன்னாா்வ நுகா்வோா் உரிமை பாதுகாப்பு நல மைய உறுப்பினா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா், துணை வட்டாட்சியா் பொன்னமாளிடம் மனு அளிக்கப்பட்டது.