செய்திகள் :

குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயா்வு

post image

குஜராத் மாநிலம், சபா்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சபா்கந்தா மாவட்ட ஆட்சியா் ரத்தன்கன்வா் கதாவிசரண் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரான்திஜ் தாலுகாவில் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த 8 வயது சிறுவனுக்கு தனியாா் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு அவரின் ரத்த மாதிரிகள் அரசு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பதை அரசு ஆய்வகமும் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தது. அவா் ஹிம்மத்நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் உடல்நிலை சீராக உள்ளது என்றாா்.

முன்னதாக, சிறுவனுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தானைச் சோ்ந்த 2 மாத கைக்குழந்தைக்கு எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருப்பது கடந்த 6-ஆம் தேதி, உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அகமதாபாத் நகரைச் சோ்ந்த 80 வயது முதியவருக்கு இத்தொற்றின் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதன்மூலம், குஜராத்தில் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயா்ந்துள்ளது.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி த... மேலும் பார்க்க

அஜித்துக்கு பத்ம பூஷண், அஸ்வினுக்கு பத்மஸ்ரீ: விருதுகள் அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்து... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

கேரளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குற்றச்சாட்டின் அடிப... மேலும் பார்க்க

தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பொய், வஞ்சக அரசியல் செய்யும் கேஜரிவால்: அமித்ஷா விமர்சனம்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பொய் மற்றும் வஞ்சக அரசியல் செய்வதாக பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். தில்லியில் வருகிற பிப். 5 அன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளத... மேலும் பார்க்க

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர்!

இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில்... மேலும் பார்க்க