கூட்டுக் குடிநீா் திட்டம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீா் வ...
தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்
வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து புது உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, அதிகாலை 4.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-25 வாகனங்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
பொய், வஞ்சக அரசியல் செய்யும் கேஜரிவால்: அமித்ஷா விமர்சனம்
நிறுத்தப்பட்ட வாகனங்கள் இட உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமானது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் போலீஸ் குற்றப்பிரிவு குழுவும் நிலைமையை மதிப்பிடுவதற்காக இடத்தை ஆய்வு செய்தது என்று தெரிவித்தார்.