விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர்!
இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு நடைபெறும்.
குடியரசு தினத்துக்கு முன்னதாக இன்று மாலை 7 மணிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரை, தூா்தா்ஷன் சேனல்கள் மற்றும் ஆகாசவாணியில் ஹிந்தியில் ஒளி-ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இன்று அவரது உரையில், “குடியரசு தினம் என்பது உண்மையில் அனைத்து குடிமக்களையும் இணைக்கும் மகிழ்ச்சியான பெருமைக்குரிய தினமாகும்.
நீண்டகாலமாக செயலற்று கிடந்த இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்து, மற்ற நாடுகளின் நட்புறவில் அதன் சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் நேரம் இது.
இதையும் படிக்க | பத்ம ஸ்ரீ விருது பெறும் 2 தமிழர்கள்!
பண்டைய காலங்களில் இந்தியா அறிவு மற்றும் ஞானத்திற்கான ஆதாரமாக அறியப்பட்டது. இருப்பினும், ஒரு இருண்ட காலகட்டம் வந்தது. காலனித்துவ ஆட்சியின் மனிதாபிமானமற்ற சுரண்டலால் நம் நாடு மிகக் கொடுமையான வறுமை நிலைக்குச் சென்றது.
அந்நியர்களின் ஆட்சியின் கட்டுபாட்டிலிருந்து தாய்நாட்டை விடுவிக்க பெரும் தியாகங்களைச் செய்த துணிச்சலான ஆன்மாக்களை நாம் நினைவு கூற வேண்டும்.
இந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். நாட்டின் வரலாற்றில் தங்கள் பங்களிப்பை உண்மையாக முழுவதும் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிரதிநிதியாக அவர் நிற்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நாடு தழுவிய சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
இதையும் படிக்க | அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!
நம் நாடு அதன் ஜனநாயக நெறிமுறைகளை மீண்டும் கண்டறிய உதவிய மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்களைக் கொண்டிருந்தது நம் நாட்டின் அதிர்ஷ்டம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நவீன காலத்தில் நாம் கற்றுக்கொண்ட தத்துவார்த்த கருத்துகள் அல்ல. அவை எப்போதும் நமது நாகரிக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.
நமது அரசியலமைப்புச் சபையின் அமைப்பு இந்தியக் குடியரசின் தகுதிக்கு ஒரு முக்கியச் சான்றாகும். நாம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அனைத்து சமூகங்களிலிருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தோம்.
இதில், சரோஜினி நாயுடு, ராஜகுமாரி அம்ரித் கவுர், சுசேதா கிருபளானி, ஹன்சா பென் மேத்தா, மாலதி சௌத்ரி போன்ற 15 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர்
உலகின் பல பகுதிகளில் பெண்களின் சம உரிமை நீண்டகால இலட்சியமாக இருந்த காலத்தில், இந்தியாவில் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் பெண்கள் தீவிரமாக பங்களித்து வந்தனர்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!
75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் அரசியலமைப்பு நம்மை வழிநடத்தி வருகிறது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சபையின் பிற புகழ்பெற்ற உறுப்பினர்கள், அதனுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் ஆகியோர் கடினமாக உழைத்து இந்த அற்புத ஆவணத்தை நமக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்," என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.