பெரம்பலூரில் சீமான் மீது வழக்கு
தந்தை பெரியாரை அவதூறாக பேசியது தொடா்பாக சீமான் மீது பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
திராவிடா் கழகத்தின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் சி. தங்கராசு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
இதேபோல, திராவிடா் விடுதலைக் கழக பெரம்பலூா் மாவட்டத் தலைவா் துரை. தாமோதரன், மக்கள் அதிகாரம் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அலெக்ஸ் ஆகியோரும் பெரம்பலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.