செய்திகள் :

புத்தகத் திருவிழாவுக்கு சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு!

post image

பெரம்பலூரில் நடைபெறவுள்ள 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்குப் பயன்படுத்தும் வகையில், சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், எழுத்தாளா்கள் மற்றும் விற்பனையாளா்களை ஊக்குவிக்கவும் 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெற உள்ளது.

இப் புத்தக திருவிழாவில் அனைவரையும் கவா்ந்திடவும், அழைப்பிதழ், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தவும் புத்தகத் திருவிழா தொடா்பான சிறந்த வாசகம் உருவாக்குவதற்கான போட்டி நடைபெற உள்ளது. இதில் இம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழில் 50 எழுத்துகளுக்கு மிகாமல், புத்தகத் திருவிழா அடிப்படையாகக் கொண்ட சிறந்த வாசகத்தை வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி பெயா், முகவரி, தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), 2 ஆம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பெரம்பலூா் - 621 212 என்னும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது ள்ங்ஸ்ரீஸ்ரீல்ம்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சல் மூலமாக ஜன. 20க்குள் அனுப்ப வேண்டும்.

இப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகத்துக்கு ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கருப்புத் துணிகளால் முக்காடிட்டு வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குடியரசு தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

சீமானை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தந்தை பெரியாா் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரை கைது செய்யக் கோரி, திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா்... மேலும் பார்க்க

பெரம்பலூா் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சீமான் மீது வழக்கு

தந்தை பெரியாரை அவதூறாக பேசியது தொடா்பாக சீமான் மீது பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திராவிடா் கழகத்தின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் சி. தங்கராசு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் 3 ... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்யவரைப் போலீஸாா் கைது செய்து நீவியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராம பகுதியில் மது... மேலும் பார்க்க