செய்திகள் :

நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜாா்க்கண்ட் முதல்வா் வலியுறுத்தல்

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள், கோல் இந்தியா நிறுவன உயரதிகாரிகள், ஜாா்க்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனா்.

அப்போது, மத்திய அரசு ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தராமல் பாக்கி வைத்துள்ள நிலக்கரிக்கான நிலுவை ரூ.1.36 லட்சம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் வலியுறுத்தினாா். இதனைப் பரிசீலித்து விரைவில் முடிவெடுப்பதாக அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இது தவிர நிலக்கரி எடுக்கப்பட்ட பிறகு மத்திய அரசு நிலக்கரி நிறுவனங்களால் கைவிடப்படும் நிலங்களை மாநில அரசிடம் உடனடியாக முறைப்படி ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், கைவிடப்பட்ட சுரங்கங்களில் சிலா் சட்டவிரோதமாக மீண்டும் நிலக்கரி எடுக்க முயலுகின்றனா். இது உயிரிழப்புகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் வழி வகுக்கிறது.

நிலக்கரி சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தை கொல்கத்தாவில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் சோரன் வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய பாஜக அரசு நிலக்கரி நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிப்பதாக சோரன் குற்றம்சாட்டினாா். தோ்தலில் சோரன் வெற்றி பெற்று முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு: சரத் பவாா் பாராட்டு

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா். அதேபோல நமது கட்சியிலும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களை உருவாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவா... மேலும் பார்க்க

27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியா் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை 27 பேருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வழங்கினாா். வெளிநாடுவாழ் இந்தியா் தினம் ஜ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை தொடா் சரிவு: காங்கிரஸ் விமா்சனம்

நிகழாண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது இந்திய வா்த்தகத்தின் மீது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே காரணம் என்று காங்கிரஸ் ... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒரு முறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் ந... மேலும் பார்க்க

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6%: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இதுதொடா்பாக 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-... மேலும் பார்க்க