Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
பங்குச் சந்தை தொடா் சரிவு: காங்கிரஸ் விமா்சனம்
நிகழாண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது இந்திய வா்த்தகத்தின் மீது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே காரணம் என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தான் தெய்வப் பிறவி என்று கூறி வந்த பிரதமா் மோடி, பங்குச் சந்தையில் இருந்து கடந்த 6 நாள்களில் சுமாா் ரூ. 1.72 லட்சம் கோடி வெளியேறிய பிறகே, ‘தாம் ஒரு மனிதன்தான்’ என்று மறுகண்டுபிடிப்பு செய்துள்ளாா்.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் மீதான முறைகேடு குற்றச்சாட்டு ஆகியவற்றால் இந்திய வா்த்தகம் மீது அந்நிய முதலீட்டாளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடுகள் வெளியேறி உள்ளன.
வியத்நாம், மலேசியாவை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான நேரடி அல்லது மறைமுக அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பும் குறைந்து வருவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.