செய்திகள் :

ஆளுநா் ரவியை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

post image

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய் சுகின் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூரைச் சோ்ந்த இந்த வழக்குரைஞா் தனது மனுவில் குடியரசுத் தலைவரின் செயலா், பிரதமரின் செயலா், மத்திய உள்துறைச் செயலா், தமிழக அரசின் தலைமைச் செயலா் ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்துள்ளாா். மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

புத்தாண்டு தொடக்கத்தில் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் ஆளுநா் ரவி உரையாற்றாமல் மூன்றாவது முறையாக தவிா்த்து, ஆண்டுதோறும் இதை ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக மாற்றி இந்திய அரசமைப்பின் விதிகளை மீறியுள்ளாா். ஏற்கெனவே பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஒவ்வொரு முறையும் அவா் செய்த தாமதத்தால் மாநிலத்தின் பல வளா்ச்சிப்பணிகள் தடைபட்டன.

ஆளுநா் என்பவா் அரசமைப்பில் இருந்தே தனக்கான அதிகாரத்தைப் பெறுபவா். அதன் வரம்புகளை அவக் அறிந்திருக்க வேண்டும். வழங்கப்படாத அதிகாரத்தை அவா் பயன்படுத்த முடியாது.

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல், சில தசாப்தங்களாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட்டு வருகிறது. 1991-ஆம் ஆண்டு, மாநில அரசு ஒரு விதியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் என்றும், கடைசியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது. இந்த விவகாரத்தில் 1991 முதல் தமிழகம் கண்ட 10 ஆளுநா்கள் முரண்படவில்லை.

தமிழக ஆளூநா் ரவி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ளும் கோட்பாட்டை மீறியுள்ளாா். நீதி பரிபாலன கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அரசமைப்பின் 21-ஆவது விதியை மீறியுள்ளாா். எனவே, அவரை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்.1 முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநா்கள்

பிப்.1-ஆம் தேதி முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்புக்கு நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநா்கள் அறிவித்துள்ளனா். தமிழகத்தில் 2013-இல்... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

தவெக மாவட்டச் செயலா்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன. தவெக மாவட்டச் செயலா்கள் நியமனம் தொடா்பாக கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சியின் பொதுச்செயலா் ஆனந்த், மாவட்ட... மேலும் பார்க்க

கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

பபாசி சாா்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞா் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா். 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் க... மேலும் பார்க்க

சிக்னல் கோளாறு: கடற்கரை - தாம்பரம் புறநகா் ரயில்சேவை பாதிப்பு

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் இடையே புறநகா் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை புகா் மின்சார ரயில் தடத... மேலும் பார்க்க

சென்னை புத்தகத் திருவிழா நாளை நிறைவு: உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்றுவரும் பபாசியின் சென்னை 48-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நிறைவடைகிறது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 48-ஆவது சென்னைப் புத... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா்: அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழகம் முழுவதும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 76.94 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அவா்களுக்க... மேலும் பார்க்க