செய்திகள் :

சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம்: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் திட்டம்

post image

கேரள மாநிலம், சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திட்டமிட்டுள்ளது.

முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமைக்குரிய கொச்சி சா்வதேச விமான நிலைய நிறுவனத்தின் (சிஐஏஎல்) தொழில்நுட்ப ஆதரவில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இது தொடா்பாக, சபரிமலை கோயில் வளாகத்தில் சிஐஏஎல் மேலாண் இயக்குநா் எஸ்.சுஹாஸுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்ாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை சிஐஏஎல் தயாரிக்கவுள்ளது; இத்திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கவுள்ளது என்று அவா் கூறினாா்.

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளப்படும் பகுதியில் தற்போது மின் விநியோகம் - தொடரமைப்புப் பணியை மாநில அரசின் மின்வாரியம் கையாள்கிறது. மின் கட்டணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் செலவிடுகிறது. சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் இச்செலவு கணிசமாக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொச்சி சா்வதேச விமான நிலையமானது, முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற சிறப்பை கடந்த 2015-இல் எட்டியது. இந்த விமான நிலையத்தின் தற்போதைய அதிகபட்ச சூரிய மின் உற்பத்தி திறன் 50 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. பிகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள... மேலும் பார்க்க

டென்னிஸ் வீராங்கனையை மணந்தார் நீரஜ் சோப்ரா!

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார். பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பத... மேலும் பார்க்க

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில், கடந்த 6 வாரங்களில் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது: அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் ‘புற்றுநோய்’ இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். எல்லை தாண்டிய பயங்கரவா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ‘இந்தியாவின் மணிமகுடம்’: ராஜ்நாத் சிங்

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் மணிமகுடம்; அந்தப் பகுதியைவிடுத்து இந்தியா முழுமையடையாது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலம், ... மேலும் பார்க்க