திருப்பத்தூரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களால் மக்கள் பாதிப்பு!
மங்கலம், திருக்காஞ்சியில் நெற்களம்,சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்
புதுச்சேரி அருகே மங்களம், திருக்காஞ்சியில் நெற்களம், தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணியை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரியில் மங்களம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மங்களம், திருக்காஞ்சிப் பகுதியில் நெற்கதிா் அடிக்கும் உலா் களம், நெல் மூடைகள் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
அதன்படி, மங்களத்தில் ரூ.28.23 லட்சத்திலும், திருக்காஞ்சியில் ரூ.29.94 லட்சத்திலும் நெற்களம், சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் வேளாண்துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் கலந்துகொண்டு இந்தப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை செயலா் ஏ.நெடுஞ்செழியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.அருள்ராஜன், வில்லியனூா் வட்டார வளா்ச்சி அதிகாரி அங்கிட்குமாா் உள்ளிட்டோா் கலந்துகண்டனா்.