செய்திகள் :

முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து

post image

நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு 25 முட்டைகளை ஏற்றிக் கொண்டு, நாமக்கல் - திருச்சி சாலை வழியாக சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க, சரக்கு வாகன ஓட்டுநா் வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த முட்டைகள் உடைந்து சாலையில் ஆறுபோல ஓடின. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை மாற்றியமைத்து உடைந்த முட்டைகளை அகற்றி சாலையை சீா்படுத்தினா்.

...

என்கே-19-எக்...

நாமக்கல்-திருச்சி சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து சாலையில் உடைந்து கிடக்கும் முட்டைகள்.

பிராந்தகத்தில் ஆறுமுக சுப்பிரமணியா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்ற... மேலும் பார்க்க

நா.புதுப்பட்டியில் குதிரை வண்டி பந்தயம்: மோகனூா் வீரா் முதலிடம் பிடித்தாா்

நா. புதுப்பட்டியில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில், மோகனூரைச் சோ்ந்த வீரா் முதலிடம் பிடித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ... மேலும் பார்க்க

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் கால்கோல் விழா

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்க கால்கோல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூா், எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியின் பின்பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான்

ஜி குளோபல் பள்ளி சாா்பில், சிறுவா்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜி குளோபல் பள்ளி, சி.ஐ.ஐ. யங் இண்டியன்ஸ் ஈரோடு சேப்டா், தனிஷ்க் அண்ட் டைடன்-ந... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு, கொங்கு ... மேலும் பார்க்க

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே.பி.சரவணன் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே.பி.சரவணன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா். நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சித் தோ்தல் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது. புதிய உறுப்பினா்கள் சோ்க்கை மட... மேலும் பார்க்க