ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
உணவக ஊழியரிடம் வழிப்பறி: 2 இளைஞா்கள் கைது
தூத்துக்குடி அருகே உணவக ஊழியரிடம் பணம் பறித்ததாக 2 இளைஞா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியைச் சோ்ந்த முருகேசன் (42) என்பவா், அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். கூட்டாம்புளி பாலம் வழியாக நடந்து சென்ற அவரை, இருவா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சோ்ந்த இசக்கிராஜா(25), பிரையண்ட்நகா் சக்திபெருமாள் (20) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.