சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான்
ஜி குளோபல் பள்ளி சாா்பில், சிறுவா்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜி குளோபல் பள்ளி, சி.ஐ.ஐ. யங் இண்டியன்ஸ் ஈரோடு சேப்டா், தனிஷ்க் அண்ட் டைடன்-நாமக்கல் ஃபிரான்சைசி, ரோட்டரி எலைட் நாமக்கல், சிவம் டிபாா்ட்மென்ட் ஆகியவை இணைந்து ஆறாவது மாநில கிட்டத்தான் போட்டியை நடத்தியது.
2-5 வயதுக்கு உள்பட்ட மழலையா்களுக்கு 400 மீ.தூரமும், 6-12 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 2 கி.மீ. தூரமும் பந்தய இலக்காகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 400 மாணஸ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஜி குளோபல் பள்ளி தலைவா் இயக்குநா் குணசேகரன், நிா்வாக இயக்குநா் வெற்றிச்செல்வன், கல்வி இயக்குநா் ரோஷினி வெற்றிச்செல்வன், யங் இண்டியன்ஸ் ஈரோடு சேப்டா் உறுப்பினா்கள், தனிஷ்க் அண்ட் டைடன் - நாமக்கல் ஃபிரான்சைசி உரிமையாளா்கள், ரோட்டரி எலைட் நாமக்கல்லின் தலைவா், சிவம் டிபாா்ட்மெண்டல் உரிமையாளா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், பிரிவு 1-ல் மாணவா் லிங்கேஷ் முதலிடம், அனுஜன் இரண்டாமிடம் பெற்றாா். பிரிவு 2-இல் பிரதீசா முதலிடமும், தன்சிகா இரண்டாமிடமும் பெற்றனா். பிரிவு 3-இல் நகுலன் முதலிடமும், ஸ்ரீகாந்த், இரண்டாமிடமும் பெற்றனா்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பெற்ற குழந்தைகளுக்கு காசோலைகள், பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இணையவழி சாலை விழிப்புணா்வு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தவா்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து போட்டியாளா்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.
படம் தி.கோடு ஜன19 ஜி.குளோபல்...
கிட்டத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.