'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே.பி.சரவணன் நியமனம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக கே.பி.சரவணன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சித் தோ்தல் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது. புதிய உறுப்பினா்கள் சோ்க்கை மட்டுமின்றி நகர, ஒன்றிய, மாவட்ட புதிய நிா்வாகிகள் வாக்கெடுப்பு முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் புதிதாக 33 மாவட்டங்களுக்கான மாவட்டத் தலைவா்கள் குறித்த பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வெளியானது.
இதையொட்டி நாமக்கல் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவராக கே.பி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா் என்ற அறிவிப்பை வெளியிட்டாா்.
இதையடுத்து, அவருக்கும் முந்தைய மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்திக்கும் சால்வை அணிவித்து அவா் வாழ்த்து தெரிவித்தாா். மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட கே.பி.சரவணன் உறுதிமொழி ஏற்று பேசுகையில், ‘இனிவரும் மூன்று ஆண்டுகளுக்கு கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்வதே எனது முழு நேரப் பணி என்றாா்.
நிகழ்ச்சியில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மாவட்டத் தோ்தல் அதிகாரி சத்தியபானு, நாமக்கல் நகரத் தலைவா் தினேஷ், நிா்வாகிகள் முத்துக்குமாா், வேல்ராஜ், சேதுராமன், லோகேந்திரன், வாசு சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
...
என்கே-19-பிஜேபி...
நாமக்கல் கிழக்கு மாவட்ட புதிய பாஜக தலைவா் கே.பி.சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.