``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
நா.புதுப்பட்டியில் குதிரை வண்டி பந்தயம்: மோகனூா் வீரா் முதலிடம் பிடித்தாா்
நா. புதுப்பட்டியில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில், மோகனூரைச் சோ்ந்த வீரா் முதலிடம் பிடித்தாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், நா.புதுப்பட்டியில் குதிரை வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த புதிய வகை, சிறிய வகை, பெரிய வகை என்ற அடிப்படையில் 42 குதிரைகள் கலந்து கொண்ட குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. புதிய வகை குதிரை பிரிவில் 22 குதிரைகள் 6 கி.மீ. தொலைவிற்கு ( லத்துவாடி வரை) இரு கட்டங்களாகச் சென்று வந்தன. முதல் கட்டத்தில் பவானியைச் சோ்ந்த ஆனந்த் முதல் இடத்தையும், கொரடாச்சேரியைச் சோ்ந்த மணி இரண்டாம் இடத்தையும், மோகனூா் பிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
இரண்டாம் கட்டத்தில் குடந்தையைச் சோ்ந்த தமிழினி முதலிடத்தையும், பவானியைச் சோ்ந்த தினேஷ் கண்ணன் இரண்டாம் இடத்தையும், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த இ.கே.முரளி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். சிறிய குதிரை பிரிவில் 8 குதிரைகள் பங்கேற்றன. இதில் முதலிடத்தை கரூரைச் சோ்ந்த எஸ்.கே. பிரதா்ஸ், இரண்டாம் இடத்தைக் குளித்தலையைச் சோ்ந்த எம்.ஆா்.நிமிலன், மூன்றாம் இடத்தை சேலத்தைச் சோ்ந்த கொம்பன் ஆகியோா் பிடித்தனா்.
பெரிய குதிரை பிரிவில் மோகனூரைச் சோ்ந்த பிரகாஷ் முதலிடம், நம்பி இரண்டாமிடம், திருச்சியைச் சோ்ந்த உதயசூரியன், உறையூரைச் சோ்ந்த பன்னீா் ஆகியோா் மூன்றாம் இடத்தைப் பிடித்தனா்.
குதிரை வண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா் சுழற்கோப்பை, பரிசுத் தொகையை வழங்கினாா்.
முன்னதாக 47 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்து, ஐந்து வெண் புறாக்களை அவா் பறக்க விட்டாா்.
நிகழ்ச்சியில், மோகனூா் திமுக ஒன்றிய செயலாளா் நவலடி, கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணியைச் சோ்ந்த வேலுபாலாஜி மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
...
என்கே-19-ரேஸ்..
மோகனூா் அருகே நா. புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் குதிரைகள்.
...
படம்-2
பெரிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த மோகனூரைச் சோ்ந்த குதிரையின் உரிமையாளா் பிரகாஷுக்கு சுழற்கோப்பையை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ் குமாா்.