ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
குளச்சலில் ரூ.13 லட்சத்தில் பூங்கா: எம்எல்ஏ அடிக்கல்
குளச்சல் தோழமை காலனியில் ரூ. 13 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் குளச்சல் நகராட்சியிலுள்ள ஆசாத் நகா் தோழமை காலனியில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.
இதில், நகராட்சி பொறியாளா் மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் ரகீம், ஜாண்சன், ரமேஷ், வினேஸ், ஷீலா ஜெயந்தி, சந்திர வயோலா,காங்கிரஸ் நிா்வாகிகள் ஜெயராஜ், பசீா்கான், எச்.எஸ்.சாகுல் அமீது, ஜலாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.